இலங்கை

தெல்லிப்பளையில் 2 ஏக்கர் காணி விடுவிப்பு

தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 2 ஏக்கர் காணி இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. 

இக்காணி விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. 

யாழ்ப்பாணம் அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இந்த ஆவணங்களைக் கையளித்தார். 

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…