இலங்கை

இடைநிறுத்தப்பட்ட சுங்க அதிகாரி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது

இலங்கை சுங்கத்தின் மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்போது சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சுங்க அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என மருந்துப் பரிசோதகரால் பரிந்துரைக்கப்பட்ட பாமோயில் (Palm Oil) அடங்கிய 5 கொள்கலன்களை அழிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. 

எனினும், அந்தப் பாமோயில் அடங்கிய கொள்கலன்களைத் தனிப்பட்ட முனையம் ஒன்றிற்கு எடுத்துச் சென்று, ஒரு கொள்கலனில் இருந்த பாமோயிலை 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

பின்னர், குறித்த கொள்கலன்களில் இருந்த பாமோயில் அழிக்கப்பட்டதாக ஆவணங்களைச் சமர்ப்பித்து, அந்தக்கோப்பைத் தன்வசம் வைத்துக்கொண்டு ஒருவருக்கு அனுகூலம் வழங்கியதன் மூலம் ‘ஊழல்’ எனும் குற்றத்தைச் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிலியந்தலை, சித்தமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…