No products in the cart.
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கோப்பாய், கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 10.00 மணியளவில், குறித்த நபர் அதிக மதுபோதையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உறங்கியுள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று உடற்கூற்றுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மரணம் தொடர்பான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.















