இலங்கை

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!

மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வரட்சி காரணமாக நீர் பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளது இதனால் காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்துள்ளது என நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர். 

குறிப்பாக காசல்ரீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவிலிருந்து அதிகமாகத் தாழிறங்கியுள்ளது. 

அதன்படி இன்று (08) காலை 6 மணி நிலவரப்படி மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 47 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43.8 அடியாகவும் குறைந்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். 

இரு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கம் நிர்மாணிக்கும் போது காணப்பட்ட பல இடிபாடுகளும் தீவுகளும் மீண்டும் மேலோங்கியிருப்பதோடு நீர்த்தேக்க பகுதிமணல் தரையாக மாறியுள்ளது. 

இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்படும் நீர் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, அந்த நீர் களனி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…