No products in the cart.
புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் போது இடம்பெறும் விபத்துகளைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவினால் இந்த வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விழாக்களை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான வழிமுறைகள் மற்றும் குறிப்பிட்ட சில விளையாட்டு நிகழ்வுகளுக்கான விசேட வழிகாட்டல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
குறுந்தூர ஓட்டம் , மரத்தன் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் பந்தயம் போன்ற நீண்ட நேரம் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள், போட்டிக்கு குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னதாகவே பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
அத்துடன் ஒரு பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெறுவது மிகவும் பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.















