இலங்கை

மருதானையில் போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞன்

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை, கோவில்வத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது  மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது, சந்தேநபரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 150 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.   

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…