இலங்கை

பாதாள உலக இணைப்புடன் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கரன்தெனிய சுத்தா என்பவரின் சகோதரர் இந்தியாவில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வேறொரு நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக கொலைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் பதுங்கியிருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த பல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நாட்டுக்கு அழைத்து வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…