இலங்கை

கொழும்பு வந்தடைந்தார் சி.பி. இராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் அவர் முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளி புனர்வாழ்வு பணிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.

அத்துடன், அவர் பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…