இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் உட்பட இருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (18) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச் சலவை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள முறைப்பாட்டாளருக்கு, மார்ச் மாதத்திற்காக வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு காசோலையை விடுவிப்பதற்காக இந்த 30,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…