இலங்கை

முழுமையற்ற சொத்து விபரங்கள் சமர்ப்பிப்பு – மகிந்த குறித்து அரசியல் விமர்சனம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்களின் ஒரு பகுதி தொடர்பான விபரங்களை மட்டும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைகுழுவிடம் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக் குழுவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்து விபரங்களை சத்திய கடதாசி ஒன்றின் மூலம் சமர்ப்பித்திருந்தார்.

எனினும் இவ்வாறு அவர் சமர்ப்பித்த சொத்து விபரங்கள் முழுமையானவை அல்ல என தெரிய வந்துள்ளது.

ஒரு தொகுதி சொத்துக்கள் பற்றிய விபரங்கள் மட்டுமே மகிந்தவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்காக லஞ்ச ஊழல் மோசடி தடுப்பு விசாரணை ஆணைக்குழு, மகிந்தவிற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கி இருந்தது.

இந்த நிலையில் தனது சொத்துக்கள் குறித்த ஒரு பகுதி ஆவணங்களை மகிந்த சமர்ப்பித்துள்ளதுடன் ஏனைய விபரங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.

ஏனைய விபரங்கள் முழுமையாக கிடைக்கப்பெற்றதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…