No products in the cart.
“பஸ் கட்டண முறைகேடுகளை கட்டுப்படுத்த புதிய புகார் சேவை தொடக்கம்”
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ் நடத்துனர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு எதிராக தொடர்பாக 118 அல்லது 119 ஆகிய அவசர அழைப்பு இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.
அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















