இலங்கை

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…