இலங்கை

இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு

இரண்டாவது கச்சா எண்ணெய் (Borethel) கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் ஆரம்பமானதன் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இதுவாகும்.

இந்தக் கப்பல் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூார நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…