‘சாகரிகா’ ரயில் மீண்டும் தடம் புரண்டது

‘சாகரிகா’ ரயில் நேற்று தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது.

இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் மீண்டும் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை தடம் புரண்டிருந்த சாகரிகா ரயில், சீர்செய்யப்பட்டு மீண்டும் கொழும்பு நோக்கி வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

இதேவேளை, மீண்டும் தடம் புரண்டுள்ள சாகரிகா ரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தடைப்பட்டுள்ள கடற்கரை மார்க்க ரயில் பாதையை இன்றைய தினத்திற்குள்ளேயே மீண்டும் திறக்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version