இலங்கை

நிதிக்குழுவின் ‘WhatsApp’ குழுவில் நடந்த தீவிர விவாதம் – இரா. சாணக்கியன் விடுத்த அவசர கோரிக்கை

அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அனுப்பிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மர்மமான முறையில் ஊடுருவப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அவசர விசாரணைகளை ஆரம்பிக்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர் என்ற வகையில், இந்த விடயம் குறித்து குழுத் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு அவசரமாக செய்தி அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நிதி மேலாண்மையை கண்காணிக்கும் அதிகாரம் கொண்ட இந்தக் குழு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து முழுமையான அறிக்கையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக நிதிக் குழுவின் சிறப்பு WhatsApp குழுவிலும் உறுப்பினர்களிடையே தீவிர கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த ஊடுருவல் சம்பவம் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதற்கான உத்தியோகபூர்வமான இறுதி முடிவு இதுவரை அரசாங்க நிதி பற்றிய குழுவினால் எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…