உலகம்

10ஜி இணைய சேவை; அறிமுகப்படுத்திய சீனா

உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்நாட்டின் ஹுபே மாகாணம் சுனன் நகரில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10ஜி மூலம் மின்னல் வேக இணையதள வசதி பெற முடியும்.

10ஜி இணையதள சேவை மூலம் 3 மில்லிநொடிகளில் 9,834 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டவுன்லோடு செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அப்லோடு செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஜி சேவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூவாய் நிறுவனம் மற்றும் சீன யுனிகான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 10ஜி இணையசேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…