இலங்கை

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.


கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காணிப் பிரச்சினை ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்தார். 

குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வந்துள்ளனர்.


இதற்கமைய, கடந்த 25ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அக்காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…