இலங்கை

யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் ஊதி, வெடி கொழுத்தி வெற்றி கொண்டாடப்பட்டது.

 தமிழக தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் – காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனைப் போட்டி உருவாகிய நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக (TVK) முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக, சுமார் 30% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…