இலங்கை

அதிதவேகத்தால் பறிபோன உயிர்கள்

அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவர் மற்றும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் மேலும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளுடன் இணைந்து, கொட்டாவையிலிருந்து அத்துருகிரிய நோக்கி அதிகாலை 2 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

விபத்தின் பின்னர் படுகாயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…