இலங்கை

“கபில சந்திரசேன மர்ம மரணம் குறித்து இன்று பிரேத பரிசோதனை”

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழுவின் மூலம் பிரேத பரிசோதனையை முன்னெடுத்து, அது குறித்த அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம், கொள்ளுப்பிட்டி பேட்ரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நேற்று (08) காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…