இலங்கை

“குருணாகல் பிரதி மேயர் இலஞ்ச வழக்கில் கைது – கட்சி உறுப்புரிமை ரத்து”

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்த அந்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் (ACMC) பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான அவர், மாநகர சபையில் ஆட்சியமைக்கும் போது தனது ஆதரவைத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் பிரதி மேயராகப் பதவியேற்றார். 

குருணாகல் பேருந்து நிலையத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் பொது மலசலக்கூடத்தைச் சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை (Tender) வழங்குவதற்காகவே அவர் குறித்த இலஞ்சப் பணத்தைக் கோரியதாகக் கூறப்படுகிறது. 

இதன்படி, 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று (08) பிரதி மேயர் கைது செய்யப்பட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…