இலங்கை

துறைமுகத்திற்கு அருகில் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் எனவும், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடி வைத்துள்ளவர் எனவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். 

அவர் உயிரிழந்த போது கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு (Brown) நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…