இலங்கை

மழையால் ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (11) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

  • பதுளை மாவட்டம்: பசறை
  • குருநாகல் மாவட்டம்: ரிதிகம
  • மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை
  • மொனராகலை மாவட்டம்: படல்கும்புர மற்றும் வெல்லவாய
  • இரத்தினபுரி மாவட்டம்: கொடகவெல

முதலாம் கட்டத்தின் கீழ் (நிலை 1) அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…