No products in the cart.
அமெரிக்கவின் மாட்டிறைச்சிக்கு தடை
அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதற்குப் பதிலாக அவுஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவுள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.