இலங்கை

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். 

வயலில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த இளைஞனின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…