இலங்கை

கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களை செயலிழக்கச் செய்யுமாறு அறிவிப்பு

தேசிய மின்சார கட்டமைப்பின் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை (Solar Panels) இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம், சூரிய பலகங்களின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

வெசாக் பண்டிகை காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், தற்போதைய மின் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ள சூழலைக் கருத்திற்கொண்டும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…