இலங்கை

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் FU Xiao, அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளார். 

இதன்போது, பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த சந்திப்பில் தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகரும், கடற்படைப் பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…