இலங்கை

மட்டக்களப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, இந்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். 

திக்கோடை சுவரணையடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

கைதானவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…