இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான  மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாகக் கைவிடப்பட்டது. 

சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழையே இதற்குக் காரணமாகும். 

இதன்படி, தொடரின் முதலாவது போட்டியில் பெற்ற 41 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 

நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பரிசோதித்த போதிலும், மைதானப் பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இறுதி நேரமான இரவு 8.02 மணி வரையிலும் போட்டியை ஆரம்பிக்க முடியாது என அவர்கள் தீர்மானித்தனர். 

இருப்பினும், இந்த வெற்றியானது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு பின் கரீபியன் தீவுகளில் இலங்கை அணி பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…