இலங்கை

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் நாளை (15) ஆம் திகதி முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். 

முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…