இலங்கை

மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் பலி

புத்தல – ஒக்கம்பிட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

கரும்புச் தோட்டம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இந்த விலங்குகள் இரண்டும் உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவை சுமார் ஒரு வயது மற்றும் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு யானைகளாகும்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இரண்டு காட்டு யானைகளின் உடற்கூறாய்வு  பரிசோதனை இன்று (14) நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளும், மொனராகலை வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…