விளையாட்டு

ஹைட்டியை வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி!

2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஹைட்டி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி நீக்கியுள்ளது. 

இரண்டாவது பாதியில் பிரேசில் அணி இன்னும் சற்று அதிரடி காட்டியிருந்தால் இந்த கோல் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக்கூடும். 

ஆரம்ப லெவனில் (Starting XI) இகோர் தியாகோவிற்குப் பதிலாகக் களம் புகுந்த மேதியஸ் குன்ஹா, போட்டியின் முதலாவது கோலை அடித்து பிரேசில் அணியை முன்னிலைப்படுத்தினார். 

அடுத்த சில நிமிடங்களில் அவர் அடித்த மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் கோல் மூலம் பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து வினிசியஸ் ஜூனியர், எதிரணி கோல்கீப்பருடன் தனியாகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி (One-on-one) ஒரு கோலை அடித்து அதனை 3-0 என மாற்றினார். 

இரண்டாவது பாதியில் ஹைட்டி அணி தனது ஆட்ட வியூகத்தை 5-4-1 என்ற அமைப்பிலிருந்து 4-4-2 ஆக மாற்றியது. இந்த மாற்றத்தினாலும், பிரேசில் அணி தனது ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்துக்கொண்டதாலும், போட்டியின் அடுத்த 45 நிமிடங்களில் கோல் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…