இலங்கை

மாயமான 2.5 மில்லியன் டொலர் – இறுதி அறிக்கை விரைவில் பாராளுமன்றுக்கு

திறைசேரியிலிருந்து கடன் செலுத்தப்பட்ட போது சைபர் குற்றவாளிகளிடம் சென்று 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல்போனமை தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளையும் பரிசீலித்து, இறுதி அறிக்கை ஒன்றை தயாரித்து விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

இந்த பணம் காணாமல்போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு வழங்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த 23ஆம் திகதி அக்குழு கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு (CERT) அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…