இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட 31 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். 

மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும், மூன்று கார்களும் ஒன்றோடொன்று மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தினால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…