இலங்கை

மரக்கடத்தல் லொறி மடக்கிப்பிடிப்பு!

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியில் மரம் கடத்தி சென்ற லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றில் மரம் கடத்தல் இடம்பெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றையதினம் 27.04.2025 சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பெறுமதி மிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் லொறியை செலுத்திய சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் 28 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…