இலங்கை

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறை – வர்த்தமானி வௌியீடு

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். 

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 54 ஆம் உறுப்புரையின், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (07) மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. 

இது குறித்து ‘அத தெரண’ செய்திச் சேவை வினவிய போது பதிலளித்த நீதி அமைச்சு, மூடப்பட்டுள்ள மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் இந்தச் சிறைச்சாலை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…