இலங்கை

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது


மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரிடமிருந்து 69 கிராம் குஷ் போதைப்பொருள், 18 கிராம் கொக்கெய்ன் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…