இலங்கை

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் உக்ரேனால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஈரான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக டெஹ்ரானில் உள்ள உக்ரேன் தூதரை ஈரானிய வெளியுறவு அமைச்சுக்கு அழைத்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவிக்கையில், ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து பெறப்படும் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை ஈரானுக்கு வழங்கி வருவதை தமது நாடு அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யக் கப்பல்கள் மீது கஸ்பியன் கடலில் தாம் தாக்குதல் நடத்தியதை உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…