No products in the cart.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (30) நண்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.














