இலங்கை

நாட்டின் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு 100 மி.மீக்கும் அதிக பலத்த மழை!

  • அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. 

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதுதவிர, வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…