No products in the cart.
ஈரான் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70ஆக அதிகரிப்பு
ஈரானில் இடம்பெற்ற வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் துறைமுகமான பந்தர் அப்பாஸில் இருந்த கொள்கலன் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அந்த பகுதியில் கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல, சேதமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.
பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் ஈரானின் மிகப் பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். இது, எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
பந்தர் அப்பாஸ் துறைமுகம், ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாத்திரமல்லாது, அந்தப் பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.