இலங்கை

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தக் குறைநிரப்பு பிரேரணைய இன்று முற்பகல் விவசாய அமைச்சர் லால்காந்தவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது. 

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டிற்குள் பயன்படுத்தப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுவதுமான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை நெல் கொள்வனவிற்காகப் பயன்படுத்துவதற்கே இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…