22ஆவது திருத்தத்திற்கு எதிராக மேலும் ஒரு மனு தாக்கல்

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களான இராஜ் வீரரத்ன, சாமர விஜேசூரிய, நந்தன குடா மீகொட, நிலந்த சத்சர கமகே மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய, குறித்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version