No products in the cart.
நேபாள வெள்ள அனர்த்தம் ; பலி எண்ணிக்கை 1,243-ஆக உயர்வு
நேபாளம்-திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரித்துள்ளது.
இமயமலை நாடான நேபாளத்தில், போட்டேகோஷி நதிக்கரையோரம் உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி மின் நிலையங்களில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் மழை மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலும் போராடி வருகின்றனர்.















