No products in the cart.
கனடாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸ் பகுதியில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை காலை சுமார் 9:20 மணியளவில், அப்பகுதியில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டு வீரர்கள் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று ஆபத்தில் இருப்பதை கவனித்து, உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.
இருப்பினும், அந்த விமானம் கனனாஸ்கிஸ் பகுதியிலுள்ள மவுண்ட் மெக்டூகல் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.















