No products in the cart.
கனடிய சந்தைகளிலிருந்து அவசரமாக திரும்பப் பெறப்படும் உணவுப் பொருள்
கனடாவில் விற்பனை செய்யப்படும் பிரபல டர்க்கி கிரேவி தயாரிப்பில், லேபிளில் குறிப்பிடப்படாத கடுகு அடங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அ தயாரிப்புகள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.கெவின்ஸ் நேச்சுரல் ஃபுட்ஸ் (Kevin’s Natural Foods) பிராண்டின் டர்க்கி கிரேவி தயாரிப்பே இவ்வாறு திரும்பப் பெறப்படுகிறது. இது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் மானிடோபா ஆகிய மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.தயாரிப்பின் லேபிளில் குறிப்பிடப்படாமல் கடுகு சேர்க்கப்பட்டுள்ளமையால், கடுகு ஒவ்வாமை அல்லது பாதிப்பு உள்ளவர்களுக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.















