இலங்கை

ஐ.நா பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கான அரசாங்கத்தின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார். 

அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் மார்க் என்ட்ரூ இதன்போது குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர் அஸாம் பாக்கீர் மாகர் (Azam Bakeer Markar, Partnerships & Dev Finance Specialist) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான மற்றும் தாங்கும்திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…