No products in the cart.
135 சட்டவிரோத மதுபான போத்தல்கள் பறிமுதல்
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (08) காலை ராகம, பொடிவீகும்புர பகுதியில் கிடைத்தத் தகவலுக்கு அமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 101 லீற்றர் 250 மில்லி லீற்றர், அதாவது 135 போத்தல்கள் சட்டவிரோத மதுபானத்துடன் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














