உலகம்

சவூதி அரேபியா மீது தாக்குதல் ; பற்றியெறிந்த ஆலைகள்; 73 போ் காயம்

சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 போ் காயமடைந்துள்ளனர்.

சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா, ஜஸான், நஜ்ரான், கமீஸ் முஷைத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலைகள் மற்றும் மின்சாரம், குடிநீா் போன்ற பொது விநியோகக் கட்டமைப்புகள் இத்தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டன.

‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால், எண்ணெய் ஆலைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

யேமனின் ஜாவ்ஃப் மாகாண சிறைச்சாலை மீது சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்ததற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஹூதிக்கள் தெரிவித்துள்ளனா்.

ஆனால், ‘இத்தாக்குதல் மிகக் கடுமையான அத்துமீறல். இதற்கு உரிய பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்’ என்று சவூதி தலைமையிலான கூட்டுப் படை எச்சரித்துள்ளது.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…