No products in the cart.
சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது மோதிய பஸ்!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் கொண்ட பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்காவடியில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளது.
இந்த சங்கிலித் தொடர் விபத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியுள்ளன.
சம்பவத்தின் போது 2 பஸ்களுக்கு இடையில் ஒரு மினி வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வேனில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு காருக்குள் இருந்த தம்பதியும் உடல் நசுங்கி பலியாகினர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.